என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிகின்றாய்
இன்று இருப்பவர்
நாளை இல்லை என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக