மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
மரக்கிளையில் ஏதோ ஒரு பறவை கூடுகட்டி
குஞ்சு பொறித்துள்ளது. குஞ்சுகள் மரக்கிளையிலிருந்து விழுவதாய் அச்சப்படுகின்றனவே ஏன்?
பலத்தக் காற்றா? யாராவது மரத்தை வெட்டுகிறார்களா? பயப்படும்படி குஞ்சுகளை விட்டுவிட்டு
தாய்ப் பறவை எங்கே சென்றது? ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை? என்று நீள்கிறது முதல்
இரண்டு அடிகள். மூன்றாவது அடியில் “தாவி விளையாடும் குரங்குகள்” என்று படிக்கும்போது
மனது நிம்மதியாகிறது. அப்படியானால் குஞ்சுகள் விழ வில்லை. குரங்குகள்தான் அவை பயப்படும்படி
விளையாடுகின்றன. குரங்குகளுக்கு விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குஞ்சுகளுக்கு
அச்சத்தைக் கொடுத்துள்ளது. தாய்ப் பறவைக்கு குரங்குகளின் விளையாட்டு வாடிக்கையாகிவிட்டிருக்கும்.
குஞ்சுகள்தான் பழக்கிக்கொள்ள வேண்டும்.
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
© -கவியருவி ம.ரமேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக