நான் உங்கள் ஜாதி. நீங்களும் என் ஜாதி. எனக்கு
நீங்கள் ஓட்டுப் போட்டுதான் ஆக வேண்டும். நானும் ஜாதிக் கட்சியுடன் தான் கூட்டணி வைத்து
இருக்கிறேன். என்னை கைவிட்டால் என் ஜாதியே கைவிட்டாக அர்த்தம்… பல்லைக் காட்டி, கை
எடுத்துக் கும்பிட்டு… பேசி விட்டுச் சென்றார். ஓட்டு நாள் வந்தது. வாக்கு எண்ணப்பட்டது.
டேய் நம்ம ஜாதி வேட்பாளர் ஜெயிச்சுட்டாருடா… கொண்டாட்டம் தொடங்கியது. மறுநாள், ஜாதி
வேட்பாளர் கட்சி மாறிவிட்டார்.
வெற்றித் தோல்விளை
இன்று தீர்மானிக்கிறது
ஜாதி ஓட்டுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக