உதிரும்
சருகு
பாரமாகிப்போனது
இரை சுமக்கும்
எறும்பு
‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’
முதியோர்
இல்லம்
சவ வீட்டின்மேல்
கரையும்
காகங்கள்
வெடிக்கும்
பட்டாசுகள்
வயிற்றில்
குத்தி குத்தி
விளையாடும்
குழந்தை
அமைதியாள்
பிள்ளையார்
வாழ்நாள்
முடிந்து
புன்னகையோடு
மடிகிறது
உதிரும்
பூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக