போடுவோமையா
ஓட்டு
வேட்பாளரைப்
பாத்து
நேத்து
குடுத்த
பெரிய நோட்டை கேட்டு...
நம்மக்கிட்டயிருந்து எடுத்துது
நம்மக்கிட்டயே வந்து சேருது...
மொகம்
சுழிக்காமல்
யாரு
குடுத்தாலும்
வாங்கிக்கடீ...
கோட்டர்
குடுத்தாலும் வாங்கிக்கடீ
ஒண்ணுக்கு
ரண்டா வித்திடலாம்…
கருப்புப்
பணம்
கொஞ்சம்
அவங்க
கணக்குல குறையும்டீ…
இதே பொழப்புதான்
உங்களுக்கு!
ஏன்டீ
நீ
மட்டும் கூட்டத்துக்குக் கூட்டம்
போனீயே…
சரி
விடுங்க -
ரண்டு
மூனு மாசம்
குடும்பத்த
ஓட்டிடலாம்
ஓட்டால!!!
“பணம் கொடுக்கறதும்
தப்பாம்
வாங்கறதும்
தப்பாம்”
அப்புடியா?
ம்… அப்புறம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக