எதிர் வீட்டாரோடு சண்டை
பேசாமல் ரசித்துக்கொண்டேன்
முற்றத்தில் சருகுகள்
நல்ல உறக்கம்
எப்படிப் பாரம் தாங்கும்?
கனமான பாறை
பற்றிக் கொண்ட பின்னர்
போனது மகிழ்ச்சி
காற்றில் அசைந்த கொடிக்கு
மழையில்லை
விரிகிறது குடை
கோடை வெயில்
தேயாமலேயே இருக்கிறது
கதை சொல்லத் தெரியா பாட்டியிடம்
நிலவின் மறுபக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக