மே 20, 2012

மக்கு (செல்லம்)…


·       தாழ்ப்பாள் போடாத நினைவுகள்

பலத்த காற்றின்போதோ
மழைக்கால காற்றின்போதோ
தாழ்ப்பாள் போடாத
ஏழை வீட்டு வாசல் கதவு
ஓங்கி ஓங்கி
அறைந்து கொண்டிருப்பதுபோல
ஏழையான என் மனதும்
உன்னைத்
திருமணம் செய்துகொள்ளாத நிலையில்
உன் நினைவுகள்
என்னை
ஓங்கி ஓங்கி
அறைந்துகொண்டேயிருக்கிறது
என் இதயத்திலும் மனத்திலும்.


·       அழுதுகொண்டே திரும்புகிறோம்

இரண்டு முறை
மணல் வீட்டை
அழித்துச் சென்றதும்
மூன்றாம் முறையாகப்
பாறாங்கற்களைக் கொண்டு
வீடு கட்டினோம்.
இடிக்க வந்த வேகத்தில்
முட்டிக்கொண்டு
அழுதுகொண்டே
திரும்புகிறது
அலையும்
நினைவும்.


·       மனமாகிப்போகிறேன்

உன்னிடம் மயங்க
என்ன காரணம் என்கிறாய்
நீ பூ சூடும்போது
மனமாகிப்போகிறேன்
நீ
சுவாசிக்கச் சுகந்த காற்றாய்.
நீ என்னிடம்
மெய்மறக்கக் காரணம்
இப்போதாவது புரிகிறதா?

·       மக்கு (செல்லம்)…

வேண்டாம்  என்று சொன்னாலும்
நீ
எதாவது ஒரு பரிசுப்பொருள்
வேண்டும் என்றே
வாங்கிக் கொடுத்துவிட்டுச் செல்கிறாய்.
பதிலுக்கு
முத்தம்
வாங்கிச் செல்லாமல்.