அக்டோபர் 04, 2011

ம. ரமேஷ் ஹைபுன் - 4


நேற்று  இரவின்  காலையில்
இந்தியா  வல்லரசாகி  இருந்தது.
சுவிஸ்  வங்கியிலிருந்து
கறுப்பு  பணம்  திரும்பியிருந்தது!
இருந்தும்
உலக  வங்கியிடம்
கடன்  கேட்டுக்கொண்டிருந்தது!!
தனிக்  குடித்தனங்களில்
விவாகரத்து  வழக்குகள்...
காதல்  போர்வைக்குள்
காம  விளையாட்டுகள்...
அரசியல்வாதிகள்
தனி  வங்கி  ஆரம்பித்திருந்தார்கள்...
எல்லோர்  கையிலும்  துப்பாக்கி...
நீதிமன்றம்
மனித  இன  படுகொலைக்கு  மாற்றாக
பறவைவிலங்கு  சுட்டதற்கு
மரண  தண்டனை  விதித்துக்  கொண்டிருந்தது...
திரைப்படம்தொலைக்காட்சி
ஆடையை  முற்றும்  துறந்த
நவீன  கலாச்சாரத்தை
போதனை  செய்து
நாமே  குழந்தை
நமக்கேன்  குழந்தை’  என்றது.
நான்
கலைந்த  ஆடையை
உடுத்திக்கொண்டு  எழுந்தேன்.

இக்கரைக்கு  
அக்கரை  பச்சை  
இல்லை 

ம. ரமேஷ் ஹைபுன் - 3


இருபத்து  மூன்றில்
ஒன்று... இரண்டு... மூன்றென...
ஒரு  நாளைக்குத்  தொடங்கியது.
பணத்தாசையோடு
உடற்சுகமும்  சேர
இருபத்தைந்தில் நான்காகிப்போனது...
இப்படியே வயதும்  ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை  ஒப்புகொள்கிறேன்.
இல்லை  என்றாள் நான்
மனசாட்சியைக்  கொன்றவளாகி  விடுவேன்.
உடலை  மட்டுமே  விற்கிறேன்
கற்பை  அல்ல”  என்றால்
அது  பொய்.
எத்தனை  ஆயிரம்  பேரிடம்
உடற்சுகம்  கண்டு
கற்பை  இழந்திருக்கிறேன்!
கணவனோடு  இருக்கப்  பட்டவளுக்கு
ஒரு  கற்பு.
என்னைப்  போன்றவளுக்கு
படுத்தெழும்  போதெல்லாம்
புதிது  புதிதாய்  ஒரு  கற்பு.”

கல்லுக்குள்  ஈரம்
விபச்சாரிக்குள்  கற்பு
வீண் 

ம. ரமேஷ் ஹைபுன் - 2


ஏழு  திணைகளாய்...
கடையெழு  வள்ளல்களாய்...
வல்லரசுகள்  தோன்றும்.
வேந்தரும்  அரசருமாய்
அரசியல்வாதிகளுக்கு
ஊராட்சிகள்  மாவட்டங்கள்
தனித்தனி  நாடுகளாக்கப்படும்.
கப்பம்  கட்டுவார்கள்...
விபச்சாரிகள்  மீண்டும்
தேவதாசிகளாய்ப்  போற்றப்படுவர்...
நக்கீரன்  பாட்டில்
எந்தக்  குற்றமும்  இருக்காது...
முப்படைகளுக்குப்  பதிலாக
அணுகுண்டு  வீச்சுகள்...
உண்மைக்  காதல்  கொண்ட
ஓர்  ஆண்
ஒரு  பெண்ணைத்  தவிர
பாம்பும்  இறந்திருக்கும்...
இருவரும்  ஆடையின்றித்  திரிவார்கள்.
விலக்கப்பட்ட  கனியென்று
எதுவும்  இல்லை.  

குற்றங்கள்  இல்லை
காதலும்  செத்துப்போனது
உலகம்  அழிந்தது 

அக்டோபர் 01, 2011

ஹைபுன் கவிதைகள்


ஹைபுன்  வடிவம்

ஜப்பானிய  மொழியில்  கவிதையின்  வடிவங்கள்  பல  காணப்படுகின்றன.  ஹைக்கூசென்ரியுரெங்காதன்கா  என்ற  வரிசையில்  ஹைபுன்  என்ற  கவிதை  வடிவமும்  இடம்பெறுகிறது.

ஹைபுன்  என்பது  தமில்  உரைநடையிடப்பட்ட  பாட்டுடை  செய்யுளாகப்  பார்க்கலாம்

செறிவான  உரைவீச்சில்  முரணான  நிகழ்வுகளை  இணைத்தும்ஒரே  விதமான  சம்பவங்களை  கோர்த்தும்அதற்கிணையான  ஒரு  செறிவான  ஹைக்கூவோடு  நிறைவு  செய்வதே  ஹைபுன்  ஆகும்.

ஜப்பானிய  மொழியில்  ஹைக்கூவிற்குப்  புகழ்பெற்ற  பாஷோ  என்பவர்  ஹைபுன்  கவிதையை  முதன்  முதலாக  எழுதியுள்ளதாக  அறியப்படுகிறது.

தமிழில்  முதன்  முதலாக  அறுவடை  நாளில்  மழை(2003),  மாய  வரம்  (2006)  தலைக்கு  மேல்  நிழல்  (2007)  என்ற  ஹைபுன்  கவிதை  தொகுதிகள்  வெளிந்துள்ளன


1.     மரணம்  நெருங்கும்  நேரம்

தாய்  தந்தையின்  முகம்  பார்த்த  மகிழ்ச்சி
மணக்கோலத்தின்  புகைப்படத்தில்

மனைவி  அடிக்கடி  சொல்வது:
நானும்  உங்க  கூடவே
வந்து  சேர்ந்துடனுங்க

இல்ல  புள்ளைங்களுக்காகவாவது
நீ  வாழ்ந்துதான்  ஆகனும்

அவ்வாறே  இப்போது  சொன்னதும்  ஞாபகம்

முதல்  காதல்

அவள்தான்  அடிக்கடி  சொல்வாள்:

ஒன்றாகச்  சேர்ந்து  வாழனும்
இல்லைன்னா...!  இல்லைன்னா?
ஒண்ணாவாவது  செத்துப்  போவனும்

இப்போது  ஒன்றாகச்  சாகத்தான்  வேண்டும்

வா  என்றதும்  வந்துவிட்டாள்

உயிர்  வாழ்ந்ததின்  கடைசி  நொடி
மரணத்தின்  முதல்  நொடியின்
இடைப்பட்ட  அந்த  நேரத்தில்


முதல்  காதலி
என்னுடனேயே  வாழ்ந்துள்ளாள்
மூளையின்  தனி  அறையில்