மே 15, 2011

ஹைக்கூ - 2










சென்ரியு - 2












சென்ரியு :
(சுருக்கமாகச்  சொல்வதென்றால்  கவித்துவம்  அதிகமாக  இருந்தால் ‘ஹைக்கூ’.  கவித்துவம்  குறைந்து  நகைச்சுவை  உணர்வு  மேலோங்கி  இருந்தால்  அது  ‘சென்ரியு’. )

சென்ரியுவும்   ஜப்பானிய  மொழிக்கவிதை.  3  அடிகள்  கொண்டது.   ஜென்  தத்துவம்,  இயற்கை  மற்றும்  மெய்யியலோடும்  சிறிது  தொடர்பு  கொண்டு   நகைச்சுவை  உணர்வை  நோக்கமாகக்  கொண்டு  எழுதப்படுவது  சென்ரியு  ஆகும்.  சென்ரியு  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்து  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்தும். 

தமிழ்நாட்டு  ‘சென்ரியு’  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘சென்ரியு’  வடிவமாகவும்  அங்கீகரித்துள்ளார்கள்.  இது  இந்திய  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்த  போக்கை  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்த  ஏற்ற  மிகச்  சிறந்த  வடிவம்  ஆகும்.  எனவே  இந்தியாவின்  சூழலுக்கு  தமிழில்  ‘ஹைக்கூ’வை  விட   ‘சென்ரியு’  சிறந்த  வடிவம்  /உள்ளடக்கம்  ஆகும்.

 தமிழில்  முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘சென்ரியு’  படைத்துள்ளார்.  தமிழில்  சிலரே  ‘சென்ரியு’  எழுதி  வருகிறார்கள்.  தமிழில்  ‘ஹைக்கூ’  பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  எழுதப்படும்  ‘ஹைக்கூ’  எல்லாம்  ‘சென்ரியு’ கவிதையாகவே  காணப்படுகின்றன. 

லிமரைக்கூ - 2








லிமரைக்கூ :
ஆங்கிலத்தில்  ‘லிமரிக்’  என்பது  ஒரு  கவிதை  வடிவம்.  5  அடிகளில்  அமையும்  இந்தக்  கவிதை  வடிவம்  முக்கியமாக  வேடிக்கை,  வினோதம்,  நகைச்சுவை  முதலிய  உணர்வோடு  இயங்கக்  கூடியது. 

தமிழில் முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘லிமரைக்கூ’வைப்  படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக   ‘லிமரைக்கூ’வைப்  படைத்த  ஈரோடு  தமிழன்பன்  ஆங்கிலத்தின்  ‘லிமரிக்’  வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில்  பயின்று  வரும்  இயைபுத்  தொடையை 1 (முதல்)  மற்றும்  3 (இறுதி)  அடிகளில்  இணைத்து]  ஜப்பானிய  ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும்  இணைத்து  3  அடிகள்  கொண்டு  ‘லிமரைக்கூ’  என்ற  புதிய  தமிழ்க்  கவிதை  வடிவத்தை  தமிழில்  ஆரம்பித்து  வைத்தார்.  இவ்வடிவமே  தமிழின்  லிமரைக்கூ  வடிவமாக  அமைந்து  விட்டது.  3  அடிகளிலும்  சந்தம்  கண்டிப்பாக  இருக்க  வேண்டும்  என்ற  விதி  இல்லை.  ஈரோடு  தமிழன்பன்  தமிழுக்கு  முதன்முறையாக  லிமரைக்கூவை அறிமுகம்  செய்து  வைத்தபோது  சந்தம் கடைபிடிக்கப்பட்டது.  (அவ்வாறு  சந்தம்  அமைத்துக்  கொண்டது  ஈரோடு  தமிழன்பனின்  தனி  உத்தி.)  மூன்று  வரி,  சந்தம்  மட்டுமே  லிமரைக்கூ  ஆகிவிடாது. ஹைக்கூ,  சென்ரியுவின்  இணைப்புதான்  லிமரைக்கூ.

மே 05, 2011

ம. ரமேஷ் கஸல்கள் - 2


கஸல்  வடிவம் :
கஸல்  அரபியில்  அரும்பிப்  பாரசீகத்தில்  போதாகி  உருதுவில்  மலர்ந்து  மணம்  வீசும்  அழகான  இலக்கிய  வடிவம்.  ‘கஸல்’  என்றாலே  ‘காதலி’யுடன்  பேசுதல்  என்று  பெயர்.  கஸல்  பெரும்பாலும்  காதலையே  பாடும்;  அதுவும்  காதலின்  சோகத்தை. சிறுபான்மை  ஆன்மிகத்தையும்  பாடும். கஸல்  இரண்டடிக்  கண்ணிகளால்  ஆனது.  ஒரு  கண்ணிக்கும்  அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற  அவசியமில்லை.  கண்ணிகளை இணைக்க  வேண்டி  இயைபுத் தொடை, யாப்புச்  சந்தம்  மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில்  பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும்  வேண்டியதில்லை.  ஹைக்கூ,  சென்ரியு,  லிமரைக்கூ போன்ற மேற்கத்திய  வடிவங்களைத்  தமிழ்மொழிக்கேற்ப  மாற்றங்களைச்  செய்துகொண்டது  இக்கஸலுக்கும்  பொருந்தும்.  பேச்சுச்  சந்தத்திற்காகவும்  கருத்துச்  சுதந்திரத்திற்காகவும்  அம்முறை  தமிழில்  தவிர்க்கப்படுகிறது.  எனவே  தமிழ்க்  கஸல்  புதுக்கவிதை  வடிவில்  காணப்படுவதால்  புதுக்கவிதை  ஆகிவிடாது.  தமிழில்  முதலிரண்டு  (மின்மினிகளால்  ஒரு  கடிதம்,  ரகசியப்  பூ )  கஸல்  கவிதைத்  தொகுதிகளைக் கவிக்கோ  அப்துல்  ரகுமான்  படைத்துள்ளார்.