பிப்ரவரி 27, 2015

அந்த ‘அம்மாவும் அப்பாவும்’

எல்லோரும்
கூட்டம் கூட்டமாகக்
கத்தியோடு புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்
வெட்டிச் சாய்த்ததை
சாலைகளின் ஓரத்தில் வைத்து
அரசியல் கொடிகளை
அதில் கட்டி பறக்கவிட்டார்கள்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலை.
என்ன வேடிக்கையென்றால்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’ மரக்கன்றுகளை
நடச்சொல்கிறார்கள்.
வளர்ந்ததும்
வெட்டத்தான் இருக்குமோ?


பிப்ரவரி 23, 2015

லவ்வருகூட இல்லையா? (பெண்ணியம்)

…      …      …      …  சரி
ஏன்டீ  நீ
பப்… கேபரேன்னு?  ‘இல்ல டீ…’
அப்பப்ப டேட்டிங் போறதில்லையா? ‘ஐயோ!’
சரிடீ பாய் ப்ரண்டுங்க? ‘நோ’
லவ்வருகூட இல்லையா? ‘இல்ல…’
நீ பொறந்துதே வேஸ்டு டீ!
உலகம் எவ்ளோ பாஸ்டா போயிட்டிருக்கு…
படிக்கிற வயசுல
இதெல்லாம் உனக்குத் தேவையா?
‘எனக்குத் தேவையின்னு தோணுறது
உனக்கு தேவையில்லையின்னு தோணுது’
சரி விடு… 

பிப்ரவரி 09, 2015

பிப்ரவரி - 14 (பெண்ணியம்)

“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்...”

பிப்ரவரி 03, 2015

அரை நிர்வாணத்தின் முரண்

விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.