ஜனவரி 31, 2013

கடவுள் - 18



 திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் கடவுள்.
முதல் வேலையாக
முதிர்க்கன்னி பட்டம் தராத
40 வயது நடிகைக்குத் திருமணம் என்ற
ரகசியத் தகவலை அறிந்ததும்
அவள் வயிற்றில்தான் பிறக்க முடிவெடுத்தார்.
அப்படி முடிவெடுத்ததற்காகப் பின்னர் வருந்தினார்.
மூன்றாம் மாதம் வயிற்றில்  இருக்கும்போதுகூட
குத்தாட்டத்துக்கு ஒப்புக்கொண்டதால்
வயிற்றில் இருந்து சிரித்துக்கொண்டார் கடவுள்.
முன்னாள் நடிகையோ
குழந்தை உதைப்பதாகச் சிலிர்த்துப்போனாள்
பெண் குழந்தையாகப் பிறந்தார் கடவுள்.
பொத்தி பொத்தி வளர்த்ததில்
வளர்ந்து நின்றாள்.
அவளை நடிகையாக்கக்கூடாது என்ற
இறுக்கம் தளர்ந்தது.
முதல் படத்திலேயே
தனக்கு நண்பனாக
காதலனாக-
கணவனாக-
நான் அவனுக்குத் தாயாக
பாட்டியாக
நடித்த அந்த நடிகனுக்கு
இவள் காதலனாக நடிக்கும்
வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ந்துபோனாள்.
நான் யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லையென்று
செய்தித்தாள்களில் பேட்டிகள்
முதல் படம் பிளாப்
என்ன காரணம் என்று ஜோசியம் பார்த்தாள்.
கவர்ச்சி குறைவாம்.
தராளமாக்கினாள்
படங்கள் வெள்ளி விழா கொண்டாடப்பட்டன
பணத் தேவைக்காக
எல்லா மொழிப் படங்களிலும்
நடித்தான்நடித்தாள்நடித்தாள்
திருமண வயதைத் தாண்டியும் நடித்தாள்.
ஐந்தாறு நடிகன்களுடனும்
பத்து பதினைந்து தொழிலதிபர்களுடனும்
நான்கு கிரிக்கெட் வீரர்களுடனும்
கிசுகிசுக்கப்பட்டாள்
நாற்பது வயதைக் கடந்தாள்
அம்மா மாதிரியே பொண்ணுன்னு
பேசப்பட்ட சூழ்நிலையில்தான்
செய்தித்தாள்களில் முதல்பக்கச் செய்தியானாள்
தனி அறையில் தற்கொலை!

ஜனவரி 30, 2013

கடவுள் - 17


ME படித்து
மாதம்ஒன் லேக் சம்பளம் வாங்கும்
மணப்பெண்ணாக மாறி
பெண் பார்க்கும் படலத்திற்காகக்
கையில் டீ கிளாஸ்களுடன் நின்றிருந்தார் கடவுள்!
இப்படி நிற்பது நான்காவது தடவையென்று
தங்கச்சிக்காரி சிரித்துக்கொண்டாள்.
அதிகம் படிச்சிட்டாகூட
மாப்பிள்ளை அமைவது கஷ்டம்தான்போல
ஒரு வழியாக மாப்பிள்ளை ஓகே சொல்ல
திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
பின்னர் அறங்கேறியது நாடகம்.
அதான் ஆச 60 நாள்
மோகம் 30 நாளுன்னு சொல்வாங்களே!
எல்லாம் முடிஞ்சதும்
ஆரம்பமானது சமையல் செய்யும் பிரச்சினை
என்னத்தான் சமையல் செய்யறையோ?
ஏன் நானும்தான் சம்பாதிக்கிறேன்
நீங்களும் சமையல் செய்யுங்கள்
பொண்ணுங்க மட்டும்தான் செய்யனுமோ?
சரி இல்லையின்னா சமையல்காரியை வைத்துக்கொள்ளலாம்.
பிரச்சினை இப்படி வந்தது:
நீங்க சமையல்காரியை வெச்சிட்ட கீறிங்கன்னு
டவுட்
லட்ச லட்சமா சம்பாதித்து என்ன பிரயோசனம்
விவாகரத்தில் வந்து நின்றது கடவுளின் வாழ்க்கை.
கணவனுக்குத் துரோகம் செய்யாத
வேலைக்காரியின் கற்பு
கலங்கப்படுத்தப்பட்டது.
வேலைக்காரியின் கணவன் சொன்னான்:
நீ ஏன்டி அழற
பாத்திரம் கழுவும்போது
உன் கைகள்தான் கறைபடும்
உன் கற்புக்கு கறை படாது!
நீ வேற வீட்ட பாரு
பையனையும் பொண்ணையும்
படிக்க வெக்க
நமக்கு வேற என்ன வேலை தெரியும்?

ஜனவரி 29, 2013

கடவுள் – 16


இளைஞனான
கடவுள் டீவியைப் போட்டான்…
அட என்ன ஒரு விளம்பரம்!
ஒரு பொண்ண பிக்கப் பண்ணணுமுன்னா
ஒரு பைக் வாங்கினாலே போதும்போல
எப்படி லிப்ட் கேக்கிறாள் பாறேன்.
மறு நாளே
அப்பா காலேஜ் போனனுமுன்னா
பைக் வேணும்
அதுவும் இந்த மாதிரி பைக் தான் வேணும்
ஏங்க உங்க புள்ள சாப்பிடமாட்டின்றான்
சரிடா நாளைக்கு வாங்கிக்கலாம்
ஏன் இன்னிக்கே வாங்கிக் கொடுத்தா என்னவாம்
முரண்டு பிடித்தார் கடவுள்.
பைக் வாங்கியாகிவிட்டது
7 நாள் சுத்தியாகிவிட்டது
காலேஜியில் கூட படிக்கிற
பொண்ணுங்க கூட லிப்ட் கேக்கல
கோபத்தில் டீவியைப் போட்டார் கடவுள்.
அட அதே பொண்ணுதான்
இப்ப காருல லிப்ட் கேட்டு போறாளே!
ஆசை யாரை விட்டது.
அப்பாவிடம் பிட் போட்டார்
கார் வாங்கியாகிவிட்டது.
பொண்ணுங்க ரோட்டுல
நிற்பதைப் பார்த்தால் சைடாக வந்து
லிப்ட் வேணுமான்னு வாலன்டரியா கேட்டான்
எந்தப் பொண்ணும் ஏறவேயில்லை
நம்மள இந்த விளம்பரக்காரனுங்க
நல்லாதான் ஏமாத்துறானுங்களோ என்று
நினைத்துக்கொண்டே
டீவியைப் போட்டான்
அடப்பாவி அந்தப் பொண்ணு
ஆமாம் அதே பொண்ணுதான்!
மேலே போற ப்ளைட்டுக்கு
லிப்ட் கேட்பதுபோல நின்றிருந்தால்!
அப்பாவிடம் ப்ளைட் வேணுமுன்னு
கேட்க முடியாதே என்று
பஸ்லிலேயே போக ஆரம்பித்தார்
ஆச்சரியம்
முதல் பார்வையிலேயே
ஒரு பெண் சிக்கிக்கொண்டாள்!
துள்ளிக் குதிக்க நினைத்ததில்
கடவுளும் அருகில் இருந்தவனும்
பஸ் படிக்கெட்டிலிருந்து விழுந்து
பரிதாபமாகச் செத்தே போனார்கள்
அவரின் அப்பாவும் அம்மாவும்
அழுதுக் கொண்டு நின்றிருந்தார்கள்.
காரியம் முடிந்ததும்
அப்பா டீவியைப் போட்டார்
அதே பைக் விளம்பரம்
ரிமோட்டை எழுத்து வீசினார்
டீவி உடைந்தது.

ஜனவரி 26, 2013

ம. ரமேஷ் ஹைபுன் – 15



தேசிய நதி நீர் இணைப்பு சாத்தியமில்லைமாநிலத்திற்குள் ஓடும் நதி நீர் இணைப்பும் சாத்தியமில்லை. இதையெல்லாம் விடுங்கள்பக்கத்து கிணற்று நீர் அந்தச் சாதியினருக்கும் இந்தச் சாதியினருக்கும் இல்லைசரி பக்கத்து ஆழ்த்துழைக் கிணறு நீர்கூட வழிப்போக்கருக்கு இல்லைநல்ல பண்பாடு போங்கள்ஒரு கிளாஸ் தண்ணி 2 ரூபாயாகிவிட்டது.   

யார் கமலண்டத்துக்குள்
அடங்கிப் போனது
காவிரி நதி நீர்

(இப்படியும் எழுதலாம்புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:

எந்தச் சாதியினருக்கும்
இல்லை என்று சுரக்கிறது
கிணற்று நீர்

அரசியல்வாதிகளைப்போல்
வளைந்து வளைந்து செல்கிறது
ஏதும் அறியாத நதிகள்

கிணற்றை எட்டிப்பார்த்து
ஏமாற்றத்துடன் திரும்பியது
வெண்ணிலவு

மோர் தயிர்
தந்த பண்பாடு
தண்ணீரை மறைக்கிறது

ஜனவரி 11, 2013

ம. ரமேஷ் ஹைபுன் – 14

ம. ரமேஷ் ஹைபுன் – 14
புகை பிடித்தல் தவறு. மது அருந்துதல் தவறு என்று தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் காட்டப்படுகிறது. அங்கு யாரும் புகையோ மதுவோ தொடுவதில்லைஆனால் அவர்கள் புகைப்பார்கள்; அருந்துவார்கள். வேறென்ன சொல்லகற்பழிப்புக்கு எதிராகப் பல கட்டப் போராட்டங்கள் நடக்கிறது. ஆனால், அவர்கள் கதற கதற கற்பை அழிக்கும் காட்சியை நடிகையின் அடுத்தப் படத்திற்கான மார்க்கெட்டுக்கும் சேர்த்து நிர்வாணமாகக் காட்டுகிறார்கள். எந்த நடிகையும் ஏன் இப்படி நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கேட்பதில்லை. நடிக்க முடியாது என்றும் சொல்வதில்லைபணம் வேண்டும் இல்லையா? நீங்களும் நடிகையாகிப்போங்கள்

விபச்சாரப் பிழைப்பு
பணம்தான் வாழ்க்கை
நாகரிகமாக பெயர் நடிகை

(இப்படியும் எழுதலாம்புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:

நிர்வாணமாகிறது
எண்ணங்கள்
மேக்கப் சதை

முழு நீலப்படம்
பலகோடி ரூபாய்
விளம்பரம்

நடிகர்களின் மகள்கள்
தாத்தாக்களுக்கு ஜோடிகள்
இந்திய சினிமா


ஜனவரி 02, 2013

ம. ரமேஷ் ஹைபுன் – 13 (தண்டனையோடு புத்தாண்டு)


கற்காலம் அல்லது சங்ககாலம் அல்லது ஏதோ ஒரு காலம்ஒருத்திக்கு ஒருவன்தான் என்பதை வரையறுத்துக் கட்டுப்பாட்டில் வைத்த காலம் முதல் 2012 வரை பெண்கள் கற்பை இழந்து இருக்கிறார்கள்சட்டங்கள் இருக்கிறதுதண்டிக்க வில்லைபெண்ணே கூட வெளியே சொல்ல வெட்கப்பட்டால் போலஇனி அந்த காலம் மலை ஏறிவிட்டது. பாதித்தால் வெளியே சொல்லுங்கள்ஆண்களுக்குத் தண்டனை கிடைக்கும்வழக்கம்போல் கொலை, கொள்ளை, கற்பு அழிப்பு, விபச்சாரம், விவாகரத்து வழக்குகள், அரசியல்வாதிகளின் ஊழல் என்று முடிந்தது கடந்த ஆண்டு. என்ன ஒரு மாற்றம் அந்த மருத்துவக்கல்லூரி மாணவியால் இனி கற்பை அழித்தால் ஆண்களுக்குத் தண்டனை என்பதை மட்டும் புதியதாக்கிவிட்டுச் சென்றது

புதிய வருடம் பிறந்தது
மக்கள் விழித்தார்கள்
பழைய தவறுகளோடு

(இப்படியும் எழுதலாம்

பிரச்சினையைச் சொன்னேன்
பெரிதாய்ப்போனது பிரச்சினை
பாதித்த பெண்ணின் புலம்பல்

குற்றத்தைச் சொல்
அதற்கு முன்னர்
உண்மையாய் இரு

பெண்ணுக்காகப்
பெண்களே போராடவில்லை
ஆண்களும் சேர்ந்துகொண்டார்கள்

ம. ரமேஷ் சென்ரியூ


விடுதலை நாள்
மகிழ்ச்சி இல்லை
தொலைந்த வாலிபம்

தங்கத்தில் தாலி
திருடர்கள் ஜாக்கிரதை
அம்மன் கழுத்தில் மஞ்சள்கயிறு

கல்விக் கடன்
வட்டியுடன் வசூலாகிறது
நோயாளிகளிடம்

இரண்டு மாதத்துக்கு
ஒரு காதல் வாய்கிறது
நடிகைக்கு

ம. ரமேஷ் ஹைக்கூ


நிசப்தம்
சப்தமாகக் கேட்கும்
இடியோசை

சிணுங்குகிறதா
அழுகிறதா தெரியவில்லை
சில்வண்டு

மின்மினி வெளிச்சம்
பறக்கும் மனசு
வண்ணத்துப்பூச்சி

எதற்கெடுத்தாலும்
என்னத்தான் கோபமோ
தொட்டால்சிணுங்கி

கவனிலிருந்து
புறப்படுகிறது கல்
பறக்கும் குருவிகள்

வீடு கட்டியும்
குடியேறவில்லை
பல்லி வாயில் சிலந்தி

ஜனவரி 01, 2013

ம. ரமேஷ் ஹைபுன் – 12


காலம் கெட்டுக் கெடக்கு. ஏன்டி இப்படி ட்ரஸ் பண்ணிக்கிட்டு வெளியே போறஎன்னதான் பேசனா இருந்தாலும் பசங்க பாத்து சைட் அடிக்கத்தானே செய்வாங்க. என்னம்மா நீயும் இப்படிப் பேசற. நீயுதான் பொடவ கட்டிக்கிட்டு வெளியில் போற… அக்கா கூடதான் மேல இருந்து கீழ வரைக்கும் மூடுற சுடி போட்டுட்டுப் போற… தப்பா பாக்காமலா இருக்காங்க… அங்க ஒண்ணு… இங்க ஒண்ணுன்னு நடக்குற குத்தத்துக்காக நான்… பொறுடி… இது சினிமாவோ… சினிமா நடிகையோட பொண்ணோ கெடையாது. கல்யாணத்துக்கு முன்னயே பாதுகாப்பா உறவு வெச்சிக்கலாம்… டேட்டிங் போறது தப்பே இல்லைன்னு சொல்ல… அவங்க சொல்லுவாங்களே தவிர அவ பெத்த பொண்ண பாதுகாப்பா உறவு வெச்சிக்கவோ டேட்டிங்கிக்கி அனுப்பி வைக்கவோ மாட்டாங்க… பெண்ணியவாதிங்க கூட ட்ரஸ் பத்தி யாராவது ஒரு ஆம்பள வாய்த் தொறந்துட்டா ஒடனே ஆணாதிக்கம் சுதந்திரமுன்னு பேசி வீதிக்கு வந்துடறாங்க… அம்மா உனக்கு வயசு ஆயிடிச்சி நீ அப்படித்தான் பேசுவ… உங்க காலம் வேற… எங்கக் காலம் வேறமா… நீ பட்டாதான் திருந்துவ… திருந்துறத்துக்கு உனக்கு உயிர் முக்கியம்… மொத்தத்துல நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம்டீ… அவ என் பொண்ணு தப்பு செய்ய மாட்டா…! வீதியில் போய்க்கொண்டிருந்த காதல் ஜோடி முணுமுணுத்துக்கொண்டே போனது: இந்த மாதிரி நெனப்புதான் பொழப்பக் கெடுக்குது.

ஆடை சுதந்திரம்
சட்டத் திருத்தம்
ஆண்களுக்குத் தண்டனை

(இப்படியும் எழுதலாம்…

தவறு செய்யாத போதே
பிறர் தவறு என்பதை
திருத்திக் கொள்

கற்பு அழித்தால்
சட்டத்தால்
ஆணுறுப்பை அழிப்போம்

ஆடையை சுழற்றியபடி
ஆடை சுதந்திரம் முக்கியம்
பெண்ணியம் போர்க்கொடி

பெற்றோர்களின் நம்பிக்கை
தவறு செய்ய மாட்டார்கள்
தவறு செய்யும் பிள்ளைகள்)