ஏப்ரல் 26, 2012

நம் திருமணத்தை!!!

·        அழகான ஓவியம் நீ!

உன் அழகை
வர்ணிக்க
நான்
எங்கிருந்து தொடர்வேன்
குழப்பம்தான் மிஞ்சுகிறது.

தண்ணீர் ஊற்றப்பெற்ற
பசுமையான சோலைபோல
மனத்தில் நிறைந்திருக்கிறது
பசுமையாய்
உன் எச்சில் முத்தம் (அல்லது) உன் காதல் மொழி

காதலில் நமக்கென்ன
அழகு
நாம்
காதலிப்பதே அழகுதான்.
--

·       முதல் காதலுக்கு

எது பிடித்திருக்கும்?
எது பிடிக்காமல் போயிருக்கும்?
முதல் காதலுக்கு

பூமியின்
முதல் காதல்
வெற்றியா? தோல்வியா?
இதைத்தான் முதலில்
ஆராய வேண்டும்

முதல் காதலின்
தோல்விதான்
வாழ்க்கையின் வெற்றியே!
--

·       நம் திருமணத்தை!!!

சென்ற வந்த இடங்கள்
யாவையும்
முற்றுமாக மறந்து போய் இருக்கிறது.
உன்னோடு
பயணித்த மயக்கத்தில்!

என்னென்ன பேசினோம் என்பதை
நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரு வார்த்தையும்
நியாபகத்துக்கு வரவில்லை!!

மறதி
எதுவும் இல்லையென்றாலும்
மறந்துதான் போயிருக்கிறேன்.
நம் திருமணத்தை!!!

அதிசயிக்காதே அன்பே!
ஆம்
நான் தான் நீ
நீ தான் நான்.

( ஆஆஆஆஆஆஆஆஆ )
--

·       காதல் முரண்

இரவும் பகலும்
யாருக்கேனும்
ஒன்றாகக் கிடைத்திருக்குமா?
நம் காதலால்
எனக்குக் கிடைத்தது.

வெயிலும் மழையும்தான்
பிறருக்கு
ஒன்றாகக் கிடைத்திருக்கும்.
ஆனால் எனக்குப்
வெயிலும் பனியும்
நம் காதலால்
ஒன்றாகக் கிடைத்தது.

நம் காதலால்
கனவுகளிலும்
உன் நினைவு
கிடைத்திருக்கிறது

எல்லாம் உன்னால்!

முத்தத்துக்குத் தயாரானதும்


·       முத்தத்துக்குத் தயாரானதும்
கன்னம் சிவக்கிறது
ரோஜா


·       கோடை காலம்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
காற்றில் அசையும் மலர்


·       நட்பும் காதலும்
முரணின்று இயங்குகிறது
அஃறிணையில்


·       வேதனையுடன்
பாடலைக் கேட்கிறான்
துணையைக் கொன்ற வேடன்


·       விடுதலைப் பெற்றார்கள்
சமுதாயத்திலிருந்து
தனி மனிதர்கள்


·       கண் முன்னே
வளர்ந்து காய்த்து நிற்கிறது
தண்ணீர் ஊற்றாத மரம்


·       வீழ்ச்சி
அழகு
அருவி