ஏப்ரல் 18, 2013

ஏழ்மையின் ரகசியம்

நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை

ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!

ஏப்ரல் 10, 2013

(கேர்ள் ப்ரண்டு) ம. ரமேஷ் ஹைபுன் – 18

(கேர்ள் ப்ரண்டு) . ரமேஷ் ஹைபுன் – 18

ம்நல்லா இருக்கியா? நான்தான் பேசறேன்என்று தனக்கு உடல் நலை சரியின்றி 10 நாட்களாக மருத்துவமனையில் இருப்பதைச் சொல்லி முடித்தால் கல்லூரித் தோழி. நானும் பிரண்டுங்களும் பாக்க வரட்டுமா என்றேன். வேண்டாம் என்றாள். அன்று முதல் மனம் வருத்தத்துடனேயே இருந்தது. ஏதோ நல்ல நாளாம். மனைவி கோயிலுக்குக் கூப்பிட்டாள். குழந்தைகளோடு கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டுவிட்டு அமர்ந்தேன். சரி கிளம்பலாமா என்றேன் மனைவியைப் பார்த்து. அட அங்கப் பாருங்க உன் கேர்ள் ப்ரண்டு என்று சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தான். அதியம்தான்உடல் நிலை சரியில்லை என்ற தோழிதான் அவள். நலம் விசாரித்தேன். மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னாள். அதற்குப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட்டோமே என்பதில் மகிழ்ச்சி நிறைந்தது.

நட்பும் வாழ்க்கையும்
வேறுவேறுதான்
ஆண்களுக்கு மட்டும்

இப்படியும் எழுதலாம் என்பதற்காகச் சில முத்தாய்ப்பான ஹைக்கூக்கள்:

தொலைத்த காதலியின்
நலம் விசாரிக்கிறேன்
தோழிகளிடம்

நட்புகள்
முறித்துக்கொள்ள வேண்டும்
திருமணத்திற்கு பின் பெண்கள்

நலம் விசாரித்தேன்
சந்தேகக் கண்
கணவன்

அன்றுபோல் இன்றும்
போடா வாடா என்கிறார்கள்

கல்லூரித் தோழிகள்

ஏப்ரல் 07, 2013

கவியருவி ம. ரமேஷ் ஹைபுன் – 17


தலையைக் குளிப்பித்து
முகம் திருத்தி
புதுசட்டை அணிவித்து முடிக்கிறார்கள்.
கூட்டம்தான் ஏனோ
ஒப்பாரி வைக்கிறது.
இறந்தவைரை
இனி எப்போது காணப்போகிறோமென்று
சண்டையிட்டு பிரிந்த
பங்காளிகள்கூட வந்திருக்கிறார்கள்.
“இப்பவாச்சும் வந்தீங்களே” என்று
கணவனை இழந்த மனைவி
நிம்மதியடைந்தார்!
பாடையை
தோள்களில் சுமக்கிறார்கள்
அவளுக்குப் பாரம் கூடிப்போனது.

ஒருவரே
சுமந்து செல்லும் படை!

தோளில் காவல் பொம்மை

ஏப்ரல் 04, 2013

கசக்கும் உன் நினைவுகள்! - கஸல்

சிறு வயதில்
புத்தகங்களுக்கிடையே
மயிலிறகு
காதல் பருவத்தில்
புத்தகத்திற்குள்
அவள் கூந்தல் மலர்கள்
இரண்டும் வீண்தான்

கொஞ்சம்
கொஞ்சமாய்
கசக்கின்றன
உன் நினைவுகள்


எந்த உலகத்தில்
இருக்கிறாய் என்று கேட்கிறார்கள்
காதல்
தனி உலகம்தான் போல
அங்கு
மகிழ்ச்சி மட்டுமே உண்டு

IPL - சென்ரியூக்கள் - 2


வீரர்கள் களைந்துபோய்
இருக்கிறார்களாம்…
இரவுகளில் பார்ட்டிகள்!

அதிரடி ஆட்டம் ஆடினார்
டீவிக்களில் செய்திகள்
49 பந்தில் 50 ரன்கள்

விக்கெட்டுகள் வீழ்ந்தன
ரசித்தார்கள்
சியர் கேர்ள்ஸ் அசைவுகளை!

கிரிக்கெட் வீரர்களும் சரி
அரசியல்வாதிகளும் சரி
நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை

கனவு காணுங்கள் -அப்துல் கலாம்
கரண்ட் கட்டால்
யார் ஜெயித்து இருப்பார்கள்?

நடிகர்கள் மட்டுமல்ல
கிரிக்கெட் வீரர்களும்தான்
வருங்கால முதலமைச்சர்கள்

மூன்று ரன்கள்
ஓடி அழுத்துக்கொண்டார்
பவுன்டரியைத் தொட்டது பந்து

மின்தடை கூட
கஷ்டமில்லை
இந்த நேரத்தில் IPL

பேட் கிளொஸ்
எல்மெட்டுடன் காட்
தடுப்பாட்டமாம்…

மூன்று ரன்கள்
ஓடி களைத்துவிட்டார்
பை ரன்னர்

நடிகர்கள்
நன்றாக நடிக்கிறார்கள்
IPL பார்க்கும் போது

IPL - சென்ரியூக்கள் - 1


தோல்வியை
வெற்றியாக நிர்ணயித்தார்கள்
அம்பையர்கள்

ஒரே பாரில்
60,000 பேர்
கிரிக்கெட் மைதானம்

வெற்றி பெற
தோல்வியடைய
விசித்திர வேண்டுதல்கள்

ஒரு பந்தில்
20 ரன்
நம்பிக்கையில் ரசிகர்கள்

கூட்டம் களைகிறது
சப்தமாகக் கேட்கிறது
கெட்ட வார்த்தைகள்

மட்டை உயர்த்தும்
பவுலர்
தலைகுனியும் பேட்ஸ்மேன்கள்

காரி உமிழ்ந்ததும்
துடைக்கிறார்
பந்தை பவுலர்

கடைத்தெருவுக்கு வரும்
முத்தின கத்தரிக்காய்
IPL வீரர்கள்

தமிழ்நாட்டில் எதிர்ப்பு
இந்தியா வரவேற்பு
மறைந்த மனித நேயம்

ஏப்ரல் 03, 2013

ஏழை மனம் - சென்ரியூக்கள்


அடைகாத்த முட்டைகள்
பொரிக்கிறது
மகிழ்கிறது ஏழை மனம்

பல மொழிகள்
நன்றாகப் பேசுகிறார்கள்
மதுக்கடை

அரிசியில் சிறு கல்
தூக்கி எறியப்பட்டது
சோறு நிறைந்த தட்டு

வங்கியில் பணம்
செலவில் மகிழ்ச்சி
நண்பர்கள் கூட்டம்

தொட்டில் பழக்கம் போல்
மதுக்கடை பழக்கம்
பணம் இருக்கும் வரைக்கும்

புரியவில்லை என்றாலும்
பெரியதாய் மதிக்கிறார்கள்
ஆங்கிலத்தில் பேச்சு

வாழ்க்கை கஷ்டப்பட்டாலும்
நன்றாக ஓடுகிறது
புதியதாக வாங்கிய கார்