டிசம்பர் 15, 2012


உருவக கதைக் கவிதை

காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.

டிசம்பர் 13, 2012

ம. ரமேஷ் ஹைபுன் – 11



காலை... சாலையில் போகும்போது நாய் ஒன்று இறந்துகிடந்தது. அலுவலகத்துக்கு விரையும்போதும்கூட எந்த வண்டிக்காரனோ கொன்னுட்டுப்போயிட்டான் என்று வருத்தப்பட்டுக்கொண்டு சென்றார். அலுவலகத்தில்கூட சரியாக வேலை செய்யவில்லை. மாலைதிரும்பும் வழியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு முன்னால் ஒருவன் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருந்தான். குடிக்கத்தான் அந்தப்பக்கமா அவசரமா போய் இருக்கனும்குடிக்கத்தான் போறானே அப்புறம் என்னதான் அவசரமோ அவனுக்குஇவனுங்களுக்கு எல்லாம் நல்லா வேணும்இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கப்போனார்கனவில் இறந்த அந்த நாயும் மனிதனும் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் சொர்க்கத்தில்!

நமக்கென்ன போகிறது
இறந்தவன் யாரோ
மறைந்த மனித நேயம்

(இப்படியும் எழுதலாம்புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:

சொர்க்கமோ நரகமோ
இறப்பு துன்பம்தான்
இழந்தவர்களுக்கு

புதிய பேருந்து நிறுத்தங்கள்
மகிழ்ச்சியில் பயணிகள்
டாஸ்மாக் கடைகள்

அலுவல் வேலை
சரியாக நடக்கவில்லை
காலை கண்ட காட்சி

இறந்த பிறகு வருத்தப்பட
என்ன இருக்கிறது
இறந்தவன் திரும்பான்)

டிசம்பர் 11, 2012

ம. ரமேஷ் ஹைபுன் – 10


ம. ரமேஷ் ஹைபுன் – 10

என்னால் முடியாது. இல்ல உன்னால் கண்டிப்பா முடியும் டா. ஏன்டா செல்லம் எனக்காக இது கூட செய்ய மாட்டியா? செய்தான். என்ன அழகுடா நீ சிகரெட் புடிப்பது. இந்த கிளாஸ அழகா புடுச்சி குடிக்கிற அழகுலதான்டா நான் விழுந்துட்டேன். சேர்ந்தே குடித்து காதல் வளர்த்து திருமணம் முடித்தார்கள். ஏதோ சொல்வார்களே அந்த நாள் எண்ணிக்கைகூட போகவில்லை. ஆச்சரியம்தான். நீங்க குடிக்கிறதையும் சிகரெட் புடிக்கிறதையும் இனி வுட்டுடு நல்லதில்ல. இல்லன்னா டைவஸ்தான்!

கெட்டதும்
நல்லதாகிறது
காதல் பொழுதுகள்

(இப்படியும் எழுதலாம்புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:

மிரட்டல்
பணிந்து போகிறான்
காதல் திருமணம்

இனிப்பும்
கசப்பும் நிறைந்தது
காதல் வாழ்க்கை)

டிசம்பர் 10, 2012

ம. ரமேஷ் ஹைபுன் – 9



ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமாகத்தான் காட்சியளிக்கிறார்கள். எங்கும் ஏறி இறங்க பேரூந்துகள், ஆட்டோக்கள். எங்க ஊருல மணி கணக்கா காத்திருக்கனும்.  எதை வாங்கினாலும் பணம் கொஞ்சம் கூட தான்.  அங்க பீடி, சிகரெட்தான் வெல கொஞ்சம் கூட இருக்கும். சம்பாதிக்கலன்னாலும் வாங்குறவங்களுக்குப் பணம் ஒரு பிரச்சினை இல்ல. தண்ணிக்குப் போன் பண்ணினா கேன் கேனா வந்துடுது. நானோ கெணறு கெணறா, பம்பு செட்டு பம்பு செட்டா அலைஞ்சதுதான் நேபகம் வருகிறது.

அவமானத்தில்
காவிரி!
நீதிமன்றத்தில் வழக்கு

இப்படியும் எழுதலாம்புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:
(கொஞ்சம் தாருங்கள்
தவிக்கிறோம்
நதிநீர்ப் பிச்சை

நீதிமன்றத் தீர்ப்புக்கு
கட்டுப்படுவதில்லை
மாநில அரசியல்கள்

விவசாயிகளுக்கு
எதிரிகள்
விவசாயிகள்

ஆடை
அழகுதான்
நிர்வாணம்)

டிசம்பர் 06, 2012

ம. ரமேஷ் சென்ரியு


வேலைவாய்ப்பில்
முரண்பாடுகள்
சமச்சீர் கல்வி

அடித்தால ஜெயில்
துணிந்து அடிக்கும்
மாணவன்

கட்டுப்பாடற்ற உலகம்
கட்டுப்பாடு தேவை
மாணவர்களுக்கு

படிடாமுடியாது!
எழுதுடாமுடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

பிரம்பால் சின்ன அடி
வலிக்காதபடி
மாணவனுக்கு

அன்பான கண்டிப்பு
மாணவன் புரிந்துகொண்டான்
கண்டித்தால் உயர்வு

டிசம்பர் 04, 2012

ம. ரமேஷ் சென்ரியு


அகழ் விளக்குகள்
கார்த்திகை தீபமில்லை
மின்தடை இரவுகள்

கனவில் கண்ட
கடவுள் சாயலில்
மாறுவேட பிச்சைக்காரன்

பழைய மணவறை
புதிய மாலைகள்
விவாகரத்தால் மூன்றாம் மணம்

கண் மூடினால்
உன் உருவம்
திறந்தால் கானல் நீர்

தோள்மேல் கை
காமமற்ற நடத்தை
ஆண்பெண் நட்பு

டிசம்பர் 03, 2012

ம. ரமேஷ் சென்ரியூக்கள்


காதலில் தொலைந்தது
சாதி மதம்கூடவே
அன்பும்

அரசியல்வாதிகளின்
வாக்குறுதிகள்
தரமற்ற இலவசங்கள்

சூரைத் தேங்காய்
மகிழ்ச்சியில்
குரங்குகள்

ஆடையில் சாயங்கள்
வெளுப்பதில்லை, வெளுத்தே வரும்
நாகரிக ஆடைகள்

கொடுத்துக் கொண்டேயிருக்கிறது
கூரையைப் பீய்த்து தெய்வம்
கூரைவீட்டானுக்குத் துன்பம்

டிசம்பர் 02, 2012

ம. ரமேஷ் ஹைக்கூ


ஒரு காளான்
புதர் மறைவில்
நூறு காளான்கள்

சாலைக்கு
தாகம் தீர்ந்தது
கானல் நீர்


தவளைகள் சப்தம்
தாலாட்டில் உறங்கும்
பாம்புகள்

மழைக்கால இரவு
பாவம்நனைந்திருக்குமா?
குளத்தில் நிலவு

மானைத் துரத்திய
சிங்கம் நின்றது
அடுத்த அடியில் எறும்புகள்

மாலை நேரம்
வீசும் காற்று
படுத்துறங்கும் பாறை

ம. ரமேஷ் சென்ரியு


கோபமான பேச்சு
என்னதான் செய்வது?
காதல் திருமணம்

எரிகிறது
பசி அடங்கவில்லை
வெட்டியான் வயிறு

இழவு வீடு
ஒப்பாரிப் பாடல்
கேசட்டில் ஒலிக்கிறது

லட்ச ரூபாய்
வீட்டுக்கு அதிஷ்டம்
மதுவால் இறப்பு

வானில்  ஒரு நிலவு
பூமியில் அதியசம்
கோடி நிலவுகள்

கொடுக்கப்பட்ட முத்தம்
விலைபோனது
திரைப்படம் வெற்றி

வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்

நலமாயிருந்தும்
ஊனமுற்றவர்கள்
முதியோர் இல்லம்

தள்ளாடி செல்லும்
கால்கள்
சவ ஊர்வலம்