ஜனவரி 28, 2015

குழந்தையின் உயிர்ப்பு...

குழந்தை ஏதோ செய்துவிட்டாள் என்று அடித்துவிட்டேன். அழாமல் பொம்மையை எடுத்துக்கொண்டு போய் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள்… இருபத்திநாலு மணிநேரமும் பொம்மைதானா என்று பொம்மையைப் பிடுங்கி தூக்கியெறிந்தேன்… அழுது… உருண்டுபுரண்டு… அடம்பிடித்து திரும்பவும் பொம்மையை தூக்கிக்கொண்டது.

பூச்செடி வாடிவிட்டதென்று
பிடுங்கியெறிந்தேன்; மறுவாரம்
அந்த இடத்தில் புதிதாய் செடிகள்  

ஜனவரி 25, 2015

பெண்பூ

வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…

அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்

ஜனவரி 09, 2015

டைவசுக்கு அப்ளை பண்ண வேண்டியிருக்கும்...

அழகு படுத்திக்கொள்ளவும்
அது என் உரிமை
சரி அடித்துவிடுகிறேன்.
அழகு படுத்திக்கொள்ளவும்
நண்பர்களோடு
இணையத்திலும் செல்லிலும்
மணிக்கணக்கில்
அரட்டையடிக்கவும் நேரம் இருக்கிறது.
வீட்டுக்கு
வேலைக்காரி தேவைதானா?
கணவன் கேட்டான்.
சும்மா இதுமாதிரி
நச்சரிச்சுக்கிட்டு இருந்தீங்கனா
டைவசுக்கு அப்ளை பண்ண வேண்டியிருக்கும்…

ஜனவரி 08, 2015

கற்பையே இழந்திருக்கலாம்! (பெண்ணியம்)

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!

ஜனவரி 06, 2015

“மம்மி நா டேட்டிங் போறேன்…” (பெண்ணியம்)

“கல்யாணத்துக்கு முன்னாடி
பாதுகாப்பா உறவு
வெச்சிக்கலாம் தப்பில்ல…”
“மம்மி நா டேட்டிங் போறேன்…”
“அடிச் செருப்பாலே நாயே…
அப்ப என்னவோ நான்
ஒரு பேச்சிக்கு சொன்னேன்
கொன்னுப்பூடுவேன் கொன்னு
ஒழுக்கமா இருந்துக்கோ”

ஜனவரி 03, 2015

கண்ணகியும் மாதவியும் (பெண்ணியம்)

நான்கைந்து ஆண்டுகள் கழித்து
குழந்தை வரம் இல்லையென்று
மற்றொருத்தியை நாடி சென்றாய்.
எனக்கென்னவோ ஒரு சந்தேகம்.
அந்தக் கோவலனும்
கண்ணகியைப் பிரியக் காரணம்
குழந்தை வரம் வேண்டியிருக்குமோ?
உனக்குப் பிறந்ததுபோன்று
அவனுக்கும் மணிமேகலை!

ஜனவரி 02, 2015

பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)

அலுவலகத்தில் கொஞ்சம்
பயணவேலையில் கொஞ்சம்
தெருவில் கொஞ்சம்
பார்வைகள் கொஞ்சம் கொஞ்சம்
நான்
இடுப்புக்குக் கொஞ்சம்
கீழிறக்கிக் கட்டும் சேலையால்
வித்தியாசமாக இருக்கிறதாம்.
தோழிகளே சொல்கிறார்கள்
சரி நீங்களே சொல்லுங்கள்
அவர்களின்
பார்வை குறையா? என் குறையா?