பிப்ரவரி 25, 2014

காதல் தோல்வி - விவாகரத்தை ஏன் தெரியப்படுத்தவில்லை?



அன்பால்
உலகையே வெல்லலாம் என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!

எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது

 பல காதல் கடிதங்கள்
ஒரு காதல் தோல்வி கடிதம்
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்வில்லை?


---

(இமேஜில் மஞ்சள் கயிறு என்பதை தாலிக் கயிறு என்று மாற்றிப் படித்துக்கொள்க.… என் போட்டோ ஷாப்பில் லி என்ற எழுத்து வரவில்லை)

பிப்ரவரி 24, 2014

நீல அம்மன் - நடிகை - சென்ரியூ

ஜட்டி பிராவோடு
நடிகை குத்தாட்டம்; மதிக்கப்பட்டது
மறுபடத்தில் அம்மன் வேடம்

பிப்ரவரி 23, 2014

மின்மினிகள் - ஹைக்கூ

விளக்கு இல்லா
குடிசைகளில் புது வெளிச்சம்

உலவும் மின்மினிகள்

பிப்ரவரி 20, 2014

சமய நல்லிணக்கம்! - சென்ரியூ

ஊருக்கு ஒரு மசூதி, சர்ச்
தெருவுக்குத் தெரு கோயில்கள்
செழிக்கும் சமய நல்லிணக்கம்!

பிப்ரவரி 11, 2014

என்னை மன்னித்திடு (கஸல்)

மணவறையில்
சம்பிரதாயங்களுக்காக
அடிக்கடி
கையெடுத்துக் கும்பிடவில்லை
‘என்னை மன்னித்திடு
என்னை மன்னித்திடு’ என்று
உன்னிடம் கெஞ்சிக் கொண்டுள்ளேன்

நான் தூவியது
அர்ச்சதை அல்ல
என் கண்ணீர்த் துளிகள்

தாலிக் கட்டிக்கொண்டு
சுட்டுவிரல் கோர்த்து
மூன்றாவது முறையாக
மணவறையை வளம் வந்து
மணமகள் அறைபோகிறாய்
நம் காதலுக்கு

கொள்ளி வைத்துவிட்டு!