மே 15, 2011

சென்ரியு - 2












சென்ரியு :
(சுருக்கமாகச்  சொல்வதென்றால்  கவித்துவம்  அதிகமாக  இருந்தால் ‘ஹைக்கூ’.  கவித்துவம்  குறைந்து  நகைச்சுவை  உணர்வு  மேலோங்கி  இருந்தால்  அது  ‘சென்ரியு’. )

சென்ரியுவும்   ஜப்பானிய  மொழிக்கவிதை.  3  அடிகள்  கொண்டது.   ஜென்  தத்துவம்,  இயற்கை  மற்றும்  மெய்யியலோடும்  சிறிது  தொடர்பு  கொண்டு   நகைச்சுவை  உணர்வை  நோக்கமாகக்  கொண்டு  எழுதப்படுவது  சென்ரியு  ஆகும்.  சென்ரியு  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்து  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்தும். 

தமிழ்நாட்டு  ‘சென்ரியு’  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘சென்ரியு’  வடிவமாகவும்  அங்கீகரித்துள்ளார்கள்.  இது  இந்திய  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்த  போக்கை  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்த  ஏற்ற  மிகச்  சிறந்த  வடிவம்  ஆகும்.  எனவே  இந்தியாவின்  சூழலுக்கு  தமிழில்  ‘ஹைக்கூ’வை  விட   ‘சென்ரியு’  சிறந்த  வடிவம்  /உள்ளடக்கம்  ஆகும்.

 தமிழில்  முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘சென்ரியு’  படைத்துள்ளார்.  தமிழில்  சிலரே  ‘சென்ரியு’  எழுதி  வருகிறார்கள்.  தமிழில்  ‘ஹைக்கூ’  பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  எழுதப்படும்  ‘ஹைக்கூ’  எல்லாம்  ‘சென்ரியு’ கவிதையாகவே  காணப்படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக