· முத்தத்துக்குத் தயாரானதும்
கன்னம்
சிவக்கிறது
ரோஜா
· கோடை காலம்
நடுங்கிக்
கொண்டிருக்கிறது
காற்றில்
அசையும் மலர்
· நட்பும் காதலும்
முரணின்று
இயங்குகிறது
அஃறிணையில்
· வேதனையுடன்
பாடலைக்
கேட்கிறான்
துணையைக்
கொன்ற வேடன்
· விடுதலைப் பெற்றார்கள்
சமுதாயத்திலிருந்து
தனி
மனிதர்கள்
· கண் முன்னே
வளர்ந்து
காய்த்து நிற்கிறது
தண்ணீர்
ஊற்றாத மரம்
· வீழ்ச்சி
அழகு
அருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக