அக்டோபர் 01, 2011

ஹைபுன் கவிதைகள்


ஹைபுன்  வடிவம்

ஜப்பானிய  மொழியில்  கவிதையின்  வடிவங்கள்  பல  காணப்படுகின்றன.  ஹைக்கூசென்ரியுரெங்காதன்கா  என்ற  வரிசையில்  ஹைபுன்  என்ற  கவிதை  வடிவமும்  இடம்பெறுகிறது.

ஹைபுன்  என்பது  தமில்  உரைநடையிடப்பட்ட  பாட்டுடை  செய்யுளாகப்  பார்க்கலாம்

செறிவான  உரைவீச்சில்  முரணான  நிகழ்வுகளை  இணைத்தும்ஒரே  விதமான  சம்பவங்களை  கோர்த்தும்அதற்கிணையான  ஒரு  செறிவான  ஹைக்கூவோடு  நிறைவு  செய்வதே  ஹைபுன்  ஆகும்.

ஜப்பானிய  மொழியில்  ஹைக்கூவிற்குப்  புகழ்பெற்ற  பாஷோ  என்பவர்  ஹைபுன்  கவிதையை  முதன்  முதலாக  எழுதியுள்ளதாக  அறியப்படுகிறது.

தமிழில்  முதன்  முதலாக  அறுவடை  நாளில்  மழை(2003),  மாய  வரம்  (2006)  தலைக்கு  மேல்  நிழல்  (2007)  என்ற  ஹைபுன்  கவிதை  தொகுதிகள்  வெளிந்துள்ளன


1.     மரணம்  நெருங்கும்  நேரம்

தாய்  தந்தையின்  முகம்  பார்த்த  மகிழ்ச்சி
மணக்கோலத்தின்  புகைப்படத்தில்

மனைவி  அடிக்கடி  சொல்வது:
நானும்  உங்க  கூடவே
வந்து  சேர்ந்துடனுங்க

இல்ல  புள்ளைங்களுக்காகவாவது
நீ  வாழ்ந்துதான்  ஆகனும்

அவ்வாறே  இப்போது  சொன்னதும்  ஞாபகம்

முதல்  காதல்

அவள்தான்  அடிக்கடி  சொல்வாள்:

ஒன்றாகச்  சேர்ந்து  வாழனும்
இல்லைன்னா...!  இல்லைன்னா?
ஒண்ணாவாவது  செத்துப்  போவனும்

இப்போது  ஒன்றாகச்  சாகத்தான்  வேண்டும்

வா  என்றதும்  வந்துவிட்டாள்

உயிர்  வாழ்ந்ததின்  கடைசி  நொடி
மரணத்தின்  முதல்  நொடியின்
இடைப்பட்ட  அந்த  நேரத்தில்


முதல்  காதலி
என்னுடனேயே  வாழ்ந்துள்ளாள்
மூளையின்  தனி  அறையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக