காதலில் தொலைந்தது
சாதி மதம்…
கூடவே
அன்பும்
அரசியல்வாதிகளின்
வாக்குறுதிகள்
தரமற்ற இலவசங்கள்
சூரைத் தேங்காய்
மகிழ்ச்சியில்
குரங்குகள்
ஆடையில் சாயங்கள்
வெளுப்பதில்லை,
வெளுத்தே வரும்
நாகரிக ஆடைகள்
கொடுத்துக் கொண்டேயிருக்கிறது
கூரையைப் பீய்த்து தெய்வம்
கூரைவீட்டானுக்குத் துன்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக