ஜனவரி 01, 2013

ம. ரமேஷ் ஹைபுன் – 12


காலம் கெட்டுக் கெடக்கு. ஏன்டி இப்படி ட்ரஸ் பண்ணிக்கிட்டு வெளியே போறஎன்னதான் பேசனா இருந்தாலும் பசங்க பாத்து சைட் அடிக்கத்தானே செய்வாங்க. என்னம்மா நீயும் இப்படிப் பேசற. நீயுதான் பொடவ கட்டிக்கிட்டு வெளியில் போற… அக்கா கூடதான் மேல இருந்து கீழ வரைக்கும் மூடுற சுடி போட்டுட்டுப் போற… தப்பா பாக்காமலா இருக்காங்க… அங்க ஒண்ணு… இங்க ஒண்ணுன்னு நடக்குற குத்தத்துக்காக நான்… பொறுடி… இது சினிமாவோ… சினிமா நடிகையோட பொண்ணோ கெடையாது. கல்யாணத்துக்கு முன்னயே பாதுகாப்பா உறவு வெச்சிக்கலாம்… டேட்டிங் போறது தப்பே இல்லைன்னு சொல்ல… அவங்க சொல்லுவாங்களே தவிர அவ பெத்த பொண்ண பாதுகாப்பா உறவு வெச்சிக்கவோ டேட்டிங்கிக்கி அனுப்பி வைக்கவோ மாட்டாங்க… பெண்ணியவாதிங்க கூட ட்ரஸ் பத்தி யாராவது ஒரு ஆம்பள வாய்த் தொறந்துட்டா ஒடனே ஆணாதிக்கம் சுதந்திரமுன்னு பேசி வீதிக்கு வந்துடறாங்க… அம்மா உனக்கு வயசு ஆயிடிச்சி நீ அப்படித்தான் பேசுவ… உங்க காலம் வேற… எங்கக் காலம் வேறமா… நீ பட்டாதான் திருந்துவ… திருந்துறத்துக்கு உனக்கு உயிர் முக்கியம்… மொத்தத்துல நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம்டீ… அவ என் பொண்ணு தப்பு செய்ய மாட்டா…! வீதியில் போய்க்கொண்டிருந்த காதல் ஜோடி முணுமுணுத்துக்கொண்டே போனது: இந்த மாதிரி நெனப்புதான் பொழப்பக் கெடுக்குது.

ஆடை சுதந்திரம்
சட்டத் திருத்தம்
ஆண்களுக்குத் தண்டனை

(இப்படியும் எழுதலாம்…

தவறு செய்யாத போதே
பிறர் தவறு என்பதை
திருத்திக் கொள்

கற்பு அழித்தால்
சட்டத்தால்
ஆணுறுப்பை அழிப்போம்

ஆடையை சுழற்றியபடி
ஆடை சுதந்திரம் முக்கியம்
பெண்ணியம் போர்க்கொடி

பெற்றோர்களின் நம்பிக்கை
தவறு செய்ய மாட்டார்கள்
தவறு செய்யும் பிள்ளைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக