ஜூன் 07, 2013

(அட இவ்ளோதான் காதலா!) ம. ரமேஷ் ஹைபுன் – 19

ஏன்டா நம்ம காதல ஊர் உலகம் ஏத்துக்குமா? அது இருக்கட்டும் டா… முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம்… இந்த சாதி சனத்தைதான் நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு… நம்மள சந்தோஷமா வாழ விடுவாங்களா?  எதுக்குடா சந்தேகம்… அம்மா அப்பா சொந்த பந்தம் இந்த ஊரு உலகம் சாதி சனம் எல்லாம் எதுத்தா கூட நாம சந்தோஷமா இருக்கலான்டா… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா நம்மள யாராலும் பிரிக்க முடியாது!.  திருமணம் நடந்தது. குடிசைகள் எரிந்தன… பெற்றோரின் இறப்பு… புகைப்படம் கண்ணீர் அஞ்சலியாக… அந்த ஆச 60 நாளும் மோகம் 30 நாளும்கூட முடியல… காதல் கசந்தது… கோர்ட் படியேறி நின்று கூவுகிறாள் நான் பெத்தவங்க கூட பொறேன்… போய்வி்ட்டாள். அவன் கண்ணீர் சொட்டுகிறான்… அட இதுதான் காதலா என்று செய்திகள் விமர்சிக்கின்றன… இப்ப எல்லாம் காதல் புனிதம் என்று யாரும் ஏமாறாமல் இருந்தால் சரிதான்!


புதிய தாலி
புதிய சுகம்
சந்தோஷம் திரும்புகிறது

மேலும் சில…

காதலர்களால்
கலங்கப்பட்டுப்போனது
இலக்கியங்களின் காதல் கதை

விபசாரம்
காதலர்களின் பிரிவு
பணம் பணம் பணம்

முத்தத்தின் சுவை
எச்சிலாகும் போது
காதல் தோற்கிறது

சாதி சனம்
ஊர் உலகம் தேவை
காதல் வாழ!

வாசல் தாண்டும் காதல்கள்
தடைகளைத் தாண்டுவதில்லை
கேவலத்தோடு வீடு திரும்புகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக